Hosur was taken into surprise when the news of IT raid in properties belonging to an Education officer of Anchety was known!
IT raids used to happen at properties belonging to politicians, real estate owners, big business people and also some time in places belonging to government officials who work on revenue related departments.
In a rarest among rare case, IT officials of Hosur raided properties belonging to an Education officer of Anchety as they repeatedly received tip-off that he has accumulated properties by all illegal means.
Sudhakar (43), a native of Vannathi Patti village near Anchetty is working as AEO in Pennagaram in Dharmapuri district.
He own and manage a english medium school in the name of Kurunji Malar School, near Ramar Kovil in Anchetty, a shopping complex named Kurunji Tower and Kurunji Lodge.
According to information available with officials, Sudhakar gathered wealth by lending money at high interest rate and most of his finance customers were teachers who work in the school that he supervise and education department officials.
It is alleged that the rate of interest is 60% to 108% per year.
A 6 member IT officials team under Mr Sairaj, Assistant Commissioner, Income Tax Department, Hosur, conducted the raid at the house of Sudhakar and also at the properties belonging to him.
End of the day, officials have gathered information on un accounted properties and cash worth few crore Rupees.
The raid was conducted yesterday.
Officials have ordered Sudhakar to appear before them at their office by today.
ஓசூர் அருகே கல்வி அலுவலர் வீட்டில் வருமான வரித்துறையினர் ஆய்வு.
அஞ்செட்டி அடுத்த வண்ணாத்திப்பட்டி ஊரை சேர்ந்தவர் சுதாகர், 43.
இவர், தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதியில், வட்டார கல்வி அலுவலராக பணிபுரிந்து வருகிறார்.
அஞ்செட்டி இராமர் கோவில் பகுதியில், குறிஞ்சி மலர் ஆங்கில துவக்கப் பள்ளி, குறிஞ்சி டவர் என்ற பெயரில் வணிக வளாகம் மற்றும் தங்கும் விடுதி மற்றும் வட்டி தொழில் நடத்தி வருகிறார்.
இவர், தான் கணக்கு காட்டும் வருமானத்திற்கு கூடுதலாக சொத்து சேர்த்துள்ளதாக, ஓசூர் வருமான வரித்துறை அலுவலகத்துக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வன்னம் இருந்தன.
சுதாகர் வட்டி தொழிலில் 60% முதல் 108% வரை வட்டி வாங்கியதாக கூறப்படுகிறது.
தன் அலுவலகத்தில் பணி புரியும் கல்வி அலுவலர்கள் மற்றும் தன் கட்டுப்பாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்கள் ஆகியோருக்கு இவர் வட்டிக்கு விட்டு பணம் ஈட்டியதாக தெரிகிறது.
பல கோடி கணக்கில் வட்டிக்கு விட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.
இதையடுத்து, ஓசூர், வருமான வரித்துறை உதவி ஆணையர், சாய்ராஜ் தலைமையில், ஆறு பேர் கொண்ட குழுவினர், கடந்த நாள் பிற்பகல் (14.04.2019) முதல் இரவு வரை, வண்ணாத்திப் பட்டியில் உள்ள சுதாகர் வீடு, வணிக வளாகம், தங்கும் விடுதி, துவக்கப் பள்ளி ஆகியவற்றில் ஆய்வு செய்தனர்.
அப்போது, பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.
வட்டார கல்வி அலுவலர் சுதாகரை, இன்று (15.04.2019) விசாரணைக்கு வரும் படி உத்தரவிட்டு வருமான வரித்துறை அலுவலர்கள் சென்றுள்ளனர்.